• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் தோழியுடன் பேசிய இளைஞரை மொட்டை அடித்த “ஆன்ட்டி-ரோமியோ” குழு

April 1, 2017 தண்டோரா குழு

ஷாஜன்பூர் பூங்காவில் பெண் தோழியுடன் இருந்த இளைஞரை “ஆன்ட்டி-ரோமியோ” குழுவினர் பிடித்து காவல்துறையினர் முன்னிலையில் மொட்டை அடித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் பெண்களை பாதுகாக்க ஆன்ட்டி- ரோமியேோ எனும் அமைப்பு உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் உ.பியில் உள்ள ஷாஜன்பூர் என்னும் பூங்காவில் இளைஞர் ஒருவர் தன் பெண் தோழியுடன் இருந்துள்ளார்.

அப்போது அங்கு ஆன்ட்டி-ரோமியோ” குழுவினர் வந்துள்ளார். இதையடுத்து, பூங்காவில் பெண் தோழியுடன் இருக்கும் இளைஞரை அழைத்த காவல்துறையினர் அங்கிருந்து அழைத்துச்சென்று முடி திருத்துபவரை கூப்பிட்டு மொட்டை அடிக்க சொல்லியுள்ளனர்.

காவல்துறையின் முன்னிலையில் கடந்த வாரம் நடந்துள்ள இந்த சம்பவத்தின் வீடியோ நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தின் போது அங்கு இருந்தசுஹைல் அகமது, லெய்க் அகமது மற்றும் சோனு பால் ஆகிய மூன்று காவல்துறையினர் அங்கு இருந்தும் இவற்றை தடுக்கவில்லை.

இதனால் அவர்கள் மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் பெண்களை பாதுகாக்க ஆன்ட்டி- ரோமியேோ எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது உடன் இருந்த காவலர்கள் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

விசாரணைக்கு பிறகு காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் கேபி சிங் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் இதுவரை யார் மீதும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க