• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல்

September 27, 2021 தண்டோரா குழு

கோவையில் பாலியல் விவகாரத்தில் கைதான அமிதேஸ் ஹார்முக் விமானப்படை அதிகாரிக்கு 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் கொடுத்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கோவை விமான படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கோவை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில்,அவரை இன்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் காவல் துறை மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து,வரும் 30ம் தேதி வரை லெப்டினன்ட் அமிதேஷ்க்கு நீதி மன்ற காவலை நீடித்து கூடுதல் மகளிர் நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க