• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது

January 12, 2021 தண்டோரா குழு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனல் குழுவினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

(Chennai Talk YouTube channel) என்ற யூடியூப் சேனல் அவ்வப்போது மக்களிடம் கருத்து கேட்டு வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்நிலையில்,
இந்த யூடியூப் சேனல் சமீபத்தில் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 2020 எப்படி போனது என்று இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்.அதில் ஒரு பெண் பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து,பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க