• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் மாதவிடாய்க்கான எமோஜிகள் உட்பட புதிதாக 230 எமோஜிகள் !

February 8, 2019 தண்டோரா குழு

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனச் சமூகவலைதளங்களில் உரையாடுவது தற்போது அதிகரித்துள்ளது. இப்படியான உரையாடல்களில் வார்த்தைகளைவிட எமோஜிகள் (உணர்ச்சி குறியீடுகள்) முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்த வருடம் 230 புதிய எமோஜிகள் வரவிருக்கின்றன. உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் அதற்கேற்ற வடிவில் ஒருங்கிணைத்து கணினி மொழி வடிவில் தரும் யூனிகோடு (unicode) நிறுவனம் இந்த எமோஜிகளை வெளியிட உள்ளது.

சேலை கட்டிய பெண், வெங்காயம், சொட்டும் ரத்தம், குறிப்பாக இந்த முறை மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், காது கேட்காதவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள், செயற்கை கை, கால் பொருத்தியவர்கள் போன்ற எமொஜிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி பெண்கள் மாதவிடாய்க்கான எமோஜிகள் இடம் பெற உள்ளன. சொட்டும் ரத்தம் போல் உருவாக்கப்பட்டுள்ள எமோஜி ரத்தத்தானம் மற்றும் மாதவிடாயையும் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது மாதவிடாய் குறித்தான தயக்கத்தை நீக்க உதவும் எனவும் யுனிகோட் கான்சோர்டியம் தெரிவித்துள்ளது. இதில் 59 புதிய எமோஜிகள், 171 ஆண், பெண் மற்றும் முக வேறுபாடுகளுடனாக (skintone) மொத்தம் 230 எமோஜிகளாக உள்ளன.

இத்தகைய எமோஜிகள் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவை இந்த வருடம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க