March 5, 2021
தண்டோரா குழு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் துவங்கியது.மார்ச் 5,6,7 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள்,நகைகளுக்கென நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்ப்பட்டுள்ளன.
கோவை ,திருப்பூர்,பொள்ளாச்சி என கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற கோ கிளாம் ஷாப்பிங் திருவிழாவின் 24 வது ஆண்டு ஷாப்பிங் திருவிழா கோவை அவினாசி சாலையில் சுகுணா மண்டபத்தில் துவங்கியது.இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் ஷாப்பிங் கண்காட்சியை மீனா ஜெயக்குமார் மற்றும் கண்காட்சியின் முக்கிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் கண்காட்சி குறித்து பேசுகையில்,
இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக பெண்களுக்கான ஆடை , ஆபரணங்கள்,குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள் சிறுவர், சிறுமியர், பெண்கள் ஆடை அணிகலன்கள், இந்தியாவின் பிரபல கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அணிகள்,ஜிமிக்கி கம்மல், வளையல் , போன்றவை இடம்பெற்றுள்ளன . குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் அழகுக்கலை பொருட்கள், சிகை, அலங்கார பொருட்கள் , முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றிற்கான தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பத்து ரூபாய் துவங்கி பத்து இலட்சம் மதிப்பு வரையிலான பொருட்கள் இங்கு விற்பனை செய்யபடும் வகையில், இங்கு 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.