• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் பார்வையில் இந்த உலகம் இன்னும் அழகாக மாறுவது ஆண்கள் கையில் தான் இருக்கிறது – நடிகர் சிவகார்த்திகேயன்

September 20, 2021

பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய கார்ட்டூனிஸ்ட் மதி தற்போது இணையதளம் துவக்க விழா கோவை பந்தய சாலையில் உள்ள சக்தி குழும அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு கார்ட்டூன் 10 தேசத்திற்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,

கார்ட்டூனிஸ்ட் மதியின் கார்ட்டூன் மிகவும் ரசித்திருக்கிறேன்.இந்த நிகழ்வுக்கு திட்டமிடல் எவ்வளவு முக்கியமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளதுm
நீருக்கு விலை வேண்டாம் என்ற கார்ட்டூனுக்கு பேசிய சிவகார்த்திகேயன்தண்ணீரை யாரும் வீணடிக்க வேண்டாம் தண்ணீரை சேமிக்க வேண்டும். மகள் மட்டும் வேண்டாமா பெண் குழந்தை வீட்டில் செல்வம் நாட்டின் செல்வம் என்ற கார்ட்டூனுக்கு பேசியவர், சமுதாயத்தில் பெண்கள் மிக முக்கியம் பெண்களிடம் அனைவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் பார்வையில் இந்த உலகம் இன்னும் அழகாக மாறுவது ஆண்கள் கையில் தான் இருக்கிறது. குழந்தைகளுக்காக அதிகமான கார்ட்டூன் போட வேண்டும் என வலியுறுத்தினார்.அனைவரும் மாஸ்க் போட வேண்டும் நாம் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது,

பல விழிப்புணர்வுகளை கார்ட்டூன்கள் வரைந்து அசத்தி வருகிறார். கார்ட்டூனிஸ்ட் மதி. குடிநீர் வணிகமாக உள்ளது அது இன்னும் வணிகமாக கூடாது என்றால் அதை நாம் சேமித்து வைக்க வேண்டும். லாரிகளில் சாலைகளில் நீர் சேர்ந்து வரை நாம் பார்த்து வருகிறோம் அதையும் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அடுத்ததாக என்னுடைய படம் டாக்டர் அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. எனக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதே ஆசை முதல் டிக்கெட் வாங்குவதில் இருக்கும் அனைவரிடமும் உள்ளது. வணிக வளாகங்களில் உள்ள மால்களில் தியேட்டர்கள் உள்ளது புது விஷயங்களை புகுத்தி வருகிறார்கள்.
ஓடிடி புது யுக்தி இந்த சமயத்தில் படம் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மேலும் படிக்க