• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்கள் கத்தியை எடுத்து செல்ல அனுமதி

January 7, 2017 தண்டோரா குழு

புது தில்லில் உள்ள மெட்ரோ ரயில்களில் பெண்கள் கத்தியை எடுத்துச் செல்ல மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (CISF) அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

தற்போது புது தில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. புது தில்லி மெட்ரோ ரயில்நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை ஈடுபடுகிறது. பெண்கள் ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ரயில்களில் கத்தியை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படைஅதிகாரி கூறியதாவது:

“பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதால், தில்லி மெட்ரோ ரயில்களில் நான்கு அங்குலத்திற்கு குறைவான நீளமுள்ள கத்திகளைப் பெண்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளோம். சிறிய கத்திகளால் பாதுகாப்பு அபாயம் இல்லை. மாறாக பெண்களுக்குப் பாதுகாப்புத் தரும் அதை அனுமதித்துள்ளோம்.

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சிஐஎஸ்எப் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னரே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கான முடிவு கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது. இதைப் போல், பாதுகாப்பு காரணமாக தீப்பெட்டி, சிகரெட் லைட்டர் ஆகியவை மெட்ரோ ரயில்களில் அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய கருவிகளை எடுத்துச் செல்லும்போது, அது குறித்த விவரத்தைப் பயணிகள் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க