• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்களை மதிக்க ஆண்களுக்கு சிறுவயதிலேயே பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும் : வெங்கையா நாயுடு

July 6, 2018 தண்டோரா குழு

பெண்களை மதிக்க ஆண்களுக்கு சிறுவயதிலேயே பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும் என துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாள் சுற்றுப்பயணமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய அவர்,

பல்வேறு பெருமைகளை பெற்ற புதுச்சேரிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இயற்கையும், சுகாதாரமும் தான் வாழ்க்கையை சிறப்பான தாக்குகிறது.புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சுத்தமாகவும், பசுமையாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருவதால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது.மாற்றம் மக்களிடத்தில் இருந்து வரவேண்டும்.பெண்களை மதிக்க ஆண்களுக்கு சிறுவயதிலேயே பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்தியாவில் இந்திரா காந்தி, செல்வி ஜெயலலிதா போன்ற பெண்கள் சிறந்த தலைவர்களாக இருந்துள்ளார்கள்.ஒவ்வொருவருக்கும் தாய்மொழி கண் போன்றது.மற்ற மொழிகள் கண்ணாடி போன்றவை. வீட்டில் இருப்பவர்களுடன் தாய்மொழியில் பேசுங்கள். மற்றவர்களுடன் வேறு மொழியில் பேசுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க