• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இந்த அரசு இருக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

March 24, 2022 தண்டோரா குழு

சிங்காநல்லூர் பகுதியில் தேமுதிக கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் சிறப்புரையாற்றிய அவர்,

தமிழகத்தில் இன்று மிக முக்கியமாக பேசப்படக் கூடிய விஷயம் பாலியல் வன்கொடுமை. விருதுநகர் மற்றும் வேலூரில் மாணவிகளுக்கு மிகப்பெரிய கொடுமை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் இது போன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எங்கு நிகழ்ந்தாலும் தேமுதிக கண்டனத்தை தெரிவிக்கும்.

ஆளும் அரசு இரும்பு கரம் கொண்டு சட்டங்களை சரிசெய்து பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தவறு செய்பவர்களுக்கு தயவு தாட்சணியம் பார்க்காமல் தண்டனை வழங்கி இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது ஒரு அரசின் கடமை.மேலும் பெண்களுக்காக இந்த அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை அத்தியாவசிய பொருட்களின் விலையை உடனடியாக கட்டுப்படுத்தி மக்களுக்கான அரசாக இந்த அரசு விளங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். தேமுதிக என்றைக்கும் மக்களுக்காக பாடுபடும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை(குடம், சேலை) வழங்கினார்.இந்நிகழ்வில் ஒரு ஆண் குழந்தைக்கு விஜயராஜா என பெயர் சூட்டினார். இந்நிகழ்வில் தேமுதிக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க