• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது

June 25, 2025 தண்டோரா குழு

கற்பகம் உயர் கல்வி அகாடமியுடன் வீ வொண்டர் வுமன் மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து, “ப்ரீடம் ரன் 5வது பதிப்பு பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம்” என்ற நிகழ்வை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடத்துகிறது.

இது பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாகமாக நடைபெறும். இந்நிகழ்வில் 10 கிமீ விழிப்புணர்வு ஓட்டம்,5 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ நடைப்பயணம் ஆகியவை இடம்பெறும்.இவை அனைத்தும் காலை 5:30 மணி முதல் காலை 8:30 மணி வரை கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி பூங்காவில் தொடங்கி முடிவடையும்.

இந்நிலையில் இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் நிகழ்வு தொடக்க விழா இன்று ஃபன் ரிபப்ளிக் மாலில் நடைபெற்றது.இதில் ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநர் ஆர்.டி.என். ஏ.கே.எஸ். வழக்கறிஞர் என்.சுந்தாவடிவேலு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வ ஃப்ரீடம் ரன் டிசர்ட்டை வெளியிட்டார்.கவுரவ விருந்தினராக ரோட்டரி கோவை உதவி ஆளுநர் ஆர்.டி.என். கவிதா கோபாலகிருஷ்ணன் ஃப்ரீடம் ரன் பதக்கத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து சைபர் கிரைம் புலனாய்வாளரும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சங்கர்ராஜ் சுப்பிரமணியன் பேசுகையில்,

“சம உரிமைகளுக்கான பெண்களின் போராட்டத்தில் அவர்களை மேம்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றவும் அனைத்து நிறுவனங்களையும், மாணவர்களையும், பொதுமக்களையும் நாங்கள் அழைக்கிறோம். இந்த ஓட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, பின்தங்கிய பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்றார்.”

வீ வொண்டர் வுமனின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் பேசுகையில்,

“இந்த ஓட்டத்தை நடத்துவதிலும், இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

வீ வொண்டர் வுமன் என்பது கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சலுகை பெற்ற மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு பயனளிக்கும் நலத்திட்டங்கள் மூலம் பெண்கள் சமூகத்தை ஆதரிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் உறுதிபூண்டுள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த மாரத்தானில் இருந்து கிடைக்கும் நிதி, கிராமப்புற பெண்களுக்கான திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பின்தங்கிய பெண் மாணவர்களுக்கு கல்வி நிதி ஆதரவு போன்ற பெண்கள் அதிகாரமளிப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிக்கப்படும்.

ஃப்ரீடம் ரன்னுக்கான பதிவுகள் இப்போது 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் திறந்திருக்கும்.

மேலும் படிக்க