• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களுக்கான ஓட்டுனர் உரிமம் வழங்கியது சவூதி அரேபியா

June 6, 2018 தண்டோரா குழு

சவூதி அரேபியாவில் முதன்முதலாக பெண்களுக்காக வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுள்ளது.

மத அடிப்படை கோட்பாடுகள் கடுமையாக பின்பற்றும் சவூதி அரேபியாவில் இளவரசராக சல்மான் பொறுப்பேற்று வருகிறார்.இவர் வந்த பின் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்து வருகிறார். விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் பெண்களை அனுமதிக்கலாம் என்று படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பெண்களுக்கான ஓட்டுனர் உரிமம் முதன்முதலாக வழங்கினார்.மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுனர் உரிமம் பெற்று இருந்த பத்து பெண்களுக்கு சில பரிசோதனைக்கு பிறகு உள்நாட்டு ஓட்டுனர் உரிமம் மாற்றி வழங்கபட்டுள்ளது.மேலும் மற்ற பெண்களுக்கு பயிற்சிக்கு பிறகு ஒட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க