• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் விலை குறைப்பு குறித்த ஸ்டாலின் கேள்விக்கு – ஓபிஎஸ் பதில்

June 6, 2018 தண்டோரா குழு

கச்சா எண்ணெய்க்கான விலை சர்வதேச சந்தையில் குறைந்தால் மட்டுமே,பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெட்ரோல் மீதான அரசின் வரியை குறைத்தது போல,தமிழக அரசும் வரியை குறைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,

தமிழகத்தில்,பெட்ரோலுக்கு 34 சதவீதமும்,டீசலுக்கு 25 சதவீதமும் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது.ஆந்திரா,தெலுங்கானாவை விட பெட்ரோல்,டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி தமிழகத்தில் குறைவு தான்.கேரளாவில் இருப்பதை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் குறைவு தான் என்றும் தெரிவித்தார்.

மேலும், விலை ஏற்றம், இறக்கத்திற்கு ஏற்ப மதிப்புக்கூட்டு வரியை மாற்ற முடியாது.கேரளாவில் மதிப்புக்கூட்டு வரிக்கு மேல் வரி கிடையாது ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை.இருப்பினும், மதிப்பு கூட்டு வரியை குறைப்பது குறித்து,முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

மேலும் படிக்க