May 22, 2018
தண்டோரா குழு
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கர்நாடக தேர்தலுக்கு முன் பத்து நாட்களாக பெட்ரோல் விலை உயரவில்லை. தேர்தல் முடிந்த இரண்டாவது நாளில் இருந்து தற்போது வரை தினமும் பெட்ரோல் டீசலின் விலை கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை பெட்ரோலின் விலை 32 காசு உயர்ந்து 79.79 நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசலின் விலை 28 பைசா உயர்ந்து 71.87 காசுக்கு விற்கபடுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டரிற்கு 2.18 ரூபாயாகவும் டீசல் விலை 2 ரூபாயாகவும் உயர்ந்துளது.