• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம்

May 16, 2022 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கோவையில் ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜ்கிருஷ்ணா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் விலைவாசியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் நிறுவன தலைவர் ராஜ் கிருஷ்ணா,

பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும்,எனவே மத்திய மாநில அரசுகள் விலை வாசி உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வறுமையில் இருப்பவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், செயலாளர் பிரபு, மகளிர் அணி செயலாளர் உஷா,மாநில இளைஞரணி செயலாளர் சிவபாலன்,ஐடி பிரிவு அமர்ஜித், புவனேஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க