• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை மே 1 முதல் அமல்

April 12, 2017 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் – டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதாவது தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவது போல் பெட்ரோல், டீசல் விலையையும் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மே 1-ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் 5 நகரங்களில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்க உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள்அறிவித்துள்ளன. அதன் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அதன்படி புதுச்சேரி, சண்டிகர், ஜம்ஷெட்பூர், விசாகப்பட்டினம், உதய்பூர் ஆகிய நகரங்களில் மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை அமலாகிறது.
தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை, இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

மேலும், எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,”இந்த முடிவில் மத்திய அரசு தலையிட முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க