November 29, 2021
தண்டோரா குழு
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒற்றை காலில் நின்ற இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்தனர்.
அதில்,தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு மக்களுக்கு உண்டான பல்வேறு திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதற்காக இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்து விட்டனர். முதல்வர் அவர்கள் பெட்ரோல் டீசல் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தனர்.