• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து கோவையில் பாஜகவினர் போராட்டம்

November 20, 2021 தண்டோரா குழு

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாட்டு வண்டியில் வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.10ம் விலை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த விலை குறைப்பு பல்வேறு மாநிலங்களிலும் அமலுக்கு வந்த சூழலில், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த சூழலில், தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதன்படி கோவையில் இன்று பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்தாகாலனி பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணா விரத போராட்டத்திற்கு பா.ஜ.க நிர்வாகிகள் மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பா.ஜ.க துணை தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடபட்ட ஒப்பந்தம் காரணமாக இப்போதும் மத்திய அரசு வட்டி செலுத்தி வருகிறது. இந்த சூழலில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு தற்போது விட்டுக்கொடுக்கும் விதமாக பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. இது பா.ஜ.க ஆளும் மாநிகங்களிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கூட அமலுக்கு வந்துள்ளதி. ஆனால் தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை. இதனை கண்டித்து தொடர்போராட்டங்கள் நடத்தப்படும்.” என்றார்.

மேலும் படிக்க