February 22, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட திமுக சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட திமுக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பட்டதில்
500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த 7 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.