June 1, 2018
தண்டோரா குழு
பெட்ரோல்,டீசல் விலையை தொடர்ந்து தற்போது சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்,நாள்தோறும் அறிவிப்பது போன்று சமையல் எரிவாயு சிலண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அறிவிக்கின்றனர்.பெட்ரோல்,டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.இந்நிலையில்,தற்போது சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.அதன் படி புதிய விலையை இன்று அறிவித்துள்ளன.இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டேன் நிறுவனம் சென்னையில் மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.2.12 காசுகள் உயர்த்து ரூ.481.84 காசுகளாக அறிவித்துள்ளது.அதைபோல், மானியம் இல்லாத வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.49.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.712 ஆக உள்ளது.வணிகப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.78 உயர்ந்து ரூ.1334 ஆக உள்ளது.மேலும்,டில்லியில் மானிய சிலிண்டரின் விலை ரூ.493.55 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.496.65 ஆகவும்,மும்பையில் ரூ.491.31 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.