• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூர் பாலியல் வன்முறை – வாட்ஸ் அப் தந்த துப்பு

January 6, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, தனியாக வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செயலில் சம்பந்தப்பட்ட நபர்களை, வாட்ஸ் அப் மூலம் அடையாளம் காட்டினார் பாதிக்கப்பட்ட பெண்.

பெங்களூரில் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண்ணை, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

அந்தக் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது சமூக வலை தளங்களில் பரவி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையெடுத்து, காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தது. இச்சம்பவம் கம்மனஹள்ளி என்ற இடத்தில் அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது.

இது குறித்த தீவிர விசாரணையை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பா (19), லெனோ (20), சுதேஷ் (20), சோமசேகர் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அன்றைய தினம் குடித்துவிட்டு, சாலையில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கத்திக் கொண்டே சென்றுள்ளனர். அப்போது ஓர் இளம் பெண், தனது தோழியுடன் ஆட்டோவில் வருவதைப் பார்த்தனர். அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவரிடம் முறைகேடாக நடந்து கொண்டுள்ளனர். இவை அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.

எனினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்துக்கு வர அஞ்சுகிறார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், குற்றவாளி ஐயப்பாவை அப்பெண் வாட்ஸ் அப் மூலம் அடையாளம் காண்பித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவரது அடையாளம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு உரிய பாதுகாப்பும் அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறோம்” என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க