பெங்களூரில் உள்ள ‘திருக்குறள் மன்ற’ நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த சுமார் 10 ஆயிரம் தமிழ் புத்தகங்கள் தெருவில் வீசப்பட்டன.
பெங்களூரில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் அல்சூரில் திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம் செயல்பட்டு வருகிறது. 1976ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நூலகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள் உள்ளன.
தாமோதர் முதலியார் தெருவில் உள்ள அந்த நூலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்த பெயர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு விஷமிகளால் தார் பூசி அழிக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை மர்ம நபர்கள் நூலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை உடைத்தனர், மேலும் ஜன்னல்களையும் உடைத்தனர்.
நூலகத்தில் இருந்த 10 ஆயிரம் தமிழ் நூல்களை அவர்கள் தெருவில் வீசினர். இது குறித்து தகவல் அறிந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள் பதறியடித்துக் கொண்டு நூலகத்திற்கு வந்தார்.
40 ஆண்டுகளாகச் சேகரித்த நூல்கள் எல்லாம் தெருவில் கிடப்பதைப் பார்த்து அவர் இதுகுறித்து அல்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரை மிகவும் தாமதமாகவே காவல்துறை ஏற்றுக் கொண்டதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். தமிழ் நூலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் இன்று காலை நூலகம் எதிரே தர்ணா நடத்தினர்.
பெங்களூர் கிழக்கு மண்டல காவல்துறை துணை கமிஷனர் சதீஷ் போராட்டக்காரர்களைச் சந்தித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நூலகத்தைக் காக்க நிதியம் அமைக்க உதவுவதாகவும் சதீஷ் தெரிவித்தார்.
இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தமிழர்-கன்னடர் நல்லுறவைக் குலைக்கும் வகையில் விஷமிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெங்களூர் வாழ் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்