• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதலில் பலியான வீர்ர்களுக்கு ஜெயின் சமூகத்தின் சார்பில் 3 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதி உதவி

June 10, 2019 தண்டோரா குழு

புல்வாமா தாக்குதலில் பலியான வீர்ர்களுக்கு ஜெயின் சமூகத்தின் சார்பாக ஒரே நாளில் வசூல் செய்த 3 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம்,புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த பிப்.14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயின் சங்காத்தானா மற்றும் சர்வதேச ஜெயின் அமைப்பின் சார்பாக ஒரே நாளில் திட்டமிடப்பட்டு மூன்று கோடியே இரண்டு லட்சம் செய்யப்பட்டது. வசூல் செய்த நிதியை தமிழகத்தை சேர்ந்த 7 வீர்ர்களுக்கும் மேலும் கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி ஷீமாவிற்கு வழங்கப்பட்டது.ஜெயின் சமூக அமைப்பின் நிர்வாகிகள் கைலாஷ் ஜெயின்,தினேஷ் கவாத்,பவன் கோத்தாரி,மற்றும் திலீப் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னதாக தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் நிர்வாகிகள்,

புல்வாமா தாக்குதலில் பலியான அனைத்து வீர்ர்களின் குடும்பங்களுக்கு இந்த நிதியை பகிரந்து அளித்து வருவதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க