• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் செய்த பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரி மாணவிகள்

February 26, 2020

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்கு “விக் ” செய்வதற்காக முடி தானம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் , பேராசிரியைகள், ஊழியர்கள் ஆகியோர் முடிதானம் செய்து வருகின்றனர்.புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் ஏற்படுத்தும் விதமாகவும், பெரு நிறுவனங்கள் மத்தியில் முடிதானம் குறித்து விழிப்புணர்வை கொண்டு செல்லும் விதமாகவும் இந்த நிகழ்ச்சியானது தனியார் நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டது.இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு முடிதானம் செய்து வருகின்றனர். புற்றுநோய் சிகிச்சையின் போது முடி உதிர்தல் இயல்பாக நடக்கும் என்றாலும், அது நோயாளிகளை பாதிக்கும்.

இந்நிலையில் தானமாக பெறப்படும் முடியாமல் செயற்கை கூந்தல் (விக்) தயாரித்து குறைவான விலையில் புற்றுநோயாளிகளுக்க கொடுக்கும் போது அது அவர்களுக்கு பயன் அளிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. முடிதானம் அளிக்கும் மாணவிகளிடம் இருந்து
10 அங்குலம் மட்டுமே முடி தானமாக வெட்டி எடுக்கப்படுகின்றது.
புற்று நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் என்பதால் முடியை தானம் செய்வதாக முடிதானம் செய்த மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க