• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை தர கோவை மாணவிகள் கூந்தல் தானம் !

March 5, 2020 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் நல ஆய்வுத்துறையும், நேரச்சுரல் சலூன் அன்ட் ஸ்பா இணைந்து, தன்னம்பிக்கையின் பூட்டுகள் என்ற பெயரில் கல்லூரி மாணவியர்களின் கூந்தலை ஒரு நல்ல காரியத்துக்காக தானமாக பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்வது ஒரு பரிசு. ஆனால், இந்த காலத்தில் அவர்கள் முடியை இழந்திருப்பது தன்னம்பிக்கையை இழந்திருப்பது கவலையை அளிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அழகுதருவது கூந்தலாக உள்ளது.செயற்கையான கூந்தல், விற்பனையில் இருந்தபோதும், இயற்கையான முடியின் தோற்றமும், வசதியும் அதில் இருப்பதில்லை. எனவே, இயற்கையான முடியோடு உலகை காண அவர்களுக்கு உதவ இந்த நிகழ்ச்சி நடந்தது.

பி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லூரி மாணவியர், 200 பேர் தங்களது முடியில் 8 இன்ச் நீளத்திற்கு முடியை தானமாக, நேரச்சுரல்ஸ் அன்ட் ஸ்பா மூலம் அளிக்க முன் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பி.எஸ்.ஜி., மகளிர் நல கல்வி மையம் செய்தது. இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக நேச்சுரல்ஸ் சலூன் அன்ட் ஸ்பா நிறுவனர் சி.கே. குமரவேல், கௌரவ விருந்தினராக பேஜ் 3 சலூர் லதா வர்கீஸ், கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. பிருந்தா, கல்லூரியின் செயலாளர் டாக்டர் டி. கண்ணையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டாக்டர் பிருந்தா, முடியை தானமாக வழங்க முன் வந்த மாணவியர்களை பாராட்டினார். நேச்சுரல் சலூன் இந்த பணியை மேற்கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சியையும், பி.எஸ்ஜி கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் நேரச்சுரல் ஸ்பா இணை நிறுவனருமான சி. கே. குமரவேலுவையும் பாராட்டி பேசுகையில், ‘’‘எல்லோராலும் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. சிலர் மட்டுமே சில காரியங்களை சாதிக்க முடியும். இந்த பணியை மேற்கொண்ட நேச்சுரல்ஸ், மகளிர் கல்வி மைய பணியாளர்கள், ஆசிரியர்கள், ஜி. உமா, கே.வி ருக்மணி மற்றும் மகேஸ்வரி மற்றும் மாணவிகளுக்கு பாராட்டுக்கள்,’’ என்றார்.

நேச்சுரல்ஸ் சலூன் மற்றும் ஸ்பா இணை நிறுவனர் சி.கே குமாரவேலு பேசுகையில்,

‘‘நீங்கள் எல்லோரும் உங்களது வசதியை விட்டுக் கொடுத்துள்ளீர்கள். இதற்கும் தைரியம் வேண்டும். இதை தொடர்ந்து நீங்கள் செய்தால், பல அதிசயங்கள் நிகழும். உங்களது இந்த முடிவால், பல புற்றுநோயிலிருந்து மீண்டு வருபவர்களின் முகத்தில் புன்னகையை காண முடியும்,’’ என்றார்.

பேஜ் 3 சலூன் லதா வர்கீஸ் பேசுகையில்,

‘‘இந்த பெண்களுக்கு நேச்சுரல்ஸ், அவர்கள் விரும்பும் வகையில் அலங்காரம் செய்து கொள்ள இலவசமாக உதவியுள்ளது. தானமாக அளிக்கப்பட்ட இந்த முடிகள், சென்னையில் உள்ள மாபெரும் விக் மேக்கர் ராஜ் இம்பெக்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவை, நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள 10 புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும். நேச்சுரல் சலூன், சிகை அலங்காரம் செய்வதில் ஒரு முன்னோடி சலூனாக உள்ளது. மகளிருக்கு அழகு சேர்க்கிறது. புற்றுநோயில் பெரிதும் அவதிப்படும் பெண்கள், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சால் முடியை இழந்து துன்புறுகின்றனர். முடி வளரும் என்றாலும், சிகிச்சையின்போது நோயாளிகள் முற்றிலும் முடியை இழந்து விடுகின்றனர்.

இயற்கையான கூந்தலில் செய்யப்படும் விக், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் நம்பிக்கையூட்டுகிறது. நமது தேவைக்கும் மேலாக, அவர்களின் தேவைக்கு உதவி செய்ய வேண்டும் என நாம் எண்ண வேண்டும். தங்களது முடியை தானமாக்க வந்த இந்த மாணவியரால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். புற்றுநோயாளிகளின் முகத்தில் இவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க