• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இலவச மறு ஆலோசனை முகாம்

December 12, 2021 தண்டோரா குழு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில்
இலவச மறு ஆலோசனை முகாம்
டிசம்பர் 13 முதல் 31வரை நடைபெறுகிறது.

புற்றுநோய் என்ற அறிகுறி தெரிந்து கொண்டாலே, பயம் நம்மை முதலில் தொற்றிக் கொண்டு வருகிறது.எந்த புற்றுநோயாக இருந்தாலும் ஏன் வருகிறது.எதனால் வருகிறது..எப்படி வந்தது.என அறிந்து கொள்ள கடும் முயற்சி செய்கிறோம்.இந்த முயற்சி பல வகைகளில் இருக்கலாம்.ஒரு மருத்துவர், உ்ங்களுக்கு புற்றுநோய் என கூறி விட்டால், அதற்கான சான்று சரியானதா என்பதை அறிந்து கொள்ளும் வேகம் தற்போது மக்களிடையே இருக்கிறது.

பலர், புற்றுநோய் பற்றி, இன்டர்நெட்டில் தேட துவங்கி விடுகின்றனர். தேடலில் பல்வேறு பதில்கள், விளக்கங்களால் குழப்பம் ஏற்படுவது இயல்பு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புற்றுநோய், இருக்கலாம். அவற்றுக்கு ஒரே மாதிரியான விளக்கங்கள் பொருந்தாது.

புற்றுநோய் வந்துவிட்டது என்ற பயமே பலரை கவலைக்குள்ளாக்கிவிடுகிறது.சிலர்,சிகிச்சை எடுத்தாலும் சரியாகாது என்ற சுயமான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.சிலர், ஆபரேஷன், கீமோதெரபி,அணுக்கதிர் சிகிச்சை போன்றவைகளுக்கு பயந்து, நாட்டுமருந்து எடுத்துக் கொள்கின்றனர். சிலர், சிகிச்சையே எடுத்துக் கொள்வதில்லை.ஆனால், ஆரம்ப கட்டத்தில் உள்ள நோயை குணமாக்க, வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

‘உங்களுக்கு புற்றுநோய்’என கண்டுபிடித்து சொன்ன டாக்டரை நீங்கள் முழுமையாக நம்பினாலும் கூட…எதற்கும் இன்னொரு டாக்டரை பார்த்து ஆலோசனை கேட்பது நல்லது என்கிறது மருத்துவ உலகம். இரண்டாவது ஆலோசனை, அனைத்து நோய்களுக்கும் பொருந்தும். ஆபரேஷன் செய்யும் முன் இரண்டாவதாக ஒரு டாக்டரை ஆலோசிப்பதில் தவறு இல்லை. இது போன்றே உங்களுக்கு புற்றுநோய் உள்ளதா, இல்லையா, சரியான சிகிச்சை என்ன என்பதை அறிய நீங்கள் நினைக்கலாம். எந்த மருத்துவமனைக்கு செல்வது, எந்த டாக்டரை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படலாம். செலவுகளும் ஆகலாம். ஆனால், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இரண்டாவது ஆலோசனை, இலவசமாக கிடைக்கிறது.மேற்கொண்டு பரிசோதனை தேவைப்பட்டால் சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம்.

எனவே, ஒளிவு மறைவு இல்லாத தெளிவான நிலையை அறிந்து கொள்ளவும், உறுதி செய்யவும் இரண்டாவதாக (செகன்ட் ஒபீனியன்) ஒரு டாக்டரை பார்த்து அறிந்து கொள்வது அவசியம். புற்றுநோய் பற்றிய சோதனை முடிவுகள், டாக்டர்களின் பரிந்துரை ஆகியவற்றுடன் எங்களது டாக்டரையும் ஒருமுறை பாருங்கள்.

எவ்வித கட்டணமும் இல்லாமல், ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும் மேற்கொண்டு பரிசோதனை தேவைப்பட்டால் சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம்.முன்பதிவு செய்ய 733 9333 485 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

மேலும் படிக்க