• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புரோஜோன் மாலில் பி. எஸ்-2 படத்தில் இடம்பெற்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி

April 14, 2023 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் பயன்படுத்திய ராஜ சிம்மாசனம், மகுடம், கேடயம் மற்றும் ஈட்டி போன்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி இன்று துவங்கியது.

இது குறித்து புரோ ஜோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பி பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயல் இயக்கத் தலைவர் முசாமில், ஆகியோர் கூறும்போது :-

இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து பொருட்களும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் இடம் பெற்ற போர்க்கால பொருட்கள் ஆகும். புரோ ஜோன் மால் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது. துவங்கிய இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருள்களும் பிரபல திரைப்பட கலை இயக்குனர் திரு. தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவானவை.

திரைப்படத்தில் மட்டுமே பார்த்து ரசித்த போர் கால பொருட்களை கோவை வாடிக்கையாளர்கள் நேரில் கண்டு ரசிக்க ஒரு வாய்ப்பை புரோஜோன் மால் ஏற்படுத்திக் தந்துள்ளது. இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை வாடிக்கையாளர்கள் இலவசமாக கண்டு செல்பி எடுத்துக் கொள்ளலாம்.கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க