• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புரூக் பீல்ட்ஸ் பிளாக் பஸ்டர் தீபாவளி ஷாப்பிங் திருவிழா !

November 30, 2022 தண்டோரா குழு

கோவை புரூக் பீல்ட்ஸ் பிளாக் பஸ்டர் தீபாவளி ஷாப்பிங் திருவிழாவில் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு ஹாலிடே பேக்கேஜ் உட்பட பல்வேறு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது.

கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை கால சிறப்பு ஷாப்பிங் திருவிழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து பதினொன்றாவது ஆண்டாக கடந்த அக்டோபர் மாதம் புரூக் பீல்ட்ஸ் பிளாக் பஸ்டர் தீபாவளி போட்டிகள் நடைபெற்றது.

இதில் புரூக் பீல்டு வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்கள் வாங்கினால், வாடிக்கையாளர்கள் பங்கேற்கும் விதமாக போட்டிகள் நடைபெற்றன.இதில் பங்கேற்ற வாடிக்கையாளர்கள் அவர்களது விவரங்கள் மற்றும் சில கேள்விகளை பூர்த்தி செய்யப்பட்ட கூப்பன்களில் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வணிக வளாக அரங்கில் நடைபெற்றது.இதில்,புரூக் பீல்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி அஸ்வின் சுப்ரமணியம் மற்றும் ஸ்பான்சர்கள் வெல் கேர் இயக்குனர் மகேஷ்,ஜி்.டி.ஹாலிடேஸ் மேலாளர் விஷ்ணுகுமார்,ஜேக்கப்,கிளஸ்டர் மேலாளர் ட்வின் ஃபேர்ட்ஸ் நிதிஷ்,ஸ்னோ பேண்டசி தமிழரசு ஸ்டோர் மேனேஜர் மேபேல் மற்றும் ஸ்பான்சர்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில்,துபாய்க்கான ஹாலிடே பேக்கேஜ் சத்தியநாராயணன்,பாலிக்கான பேக்கேஜை ஜீவந்திகா,மற்றும் ஐம்பதாயிரம் மதிப்புள்ள இலவச ஷாப்பிங் கூப்பன் உஷா ராணி, ஆகியோர் பெற்று கொண்டனர்.இதே போல பிரஜ் விஷ்னுவிற்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க