• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதி அறிவிப்பு

January 29, 2019 தண்டோரா குழு

புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியாக 7 ஆயிரம் கோடி ரூபாய்யை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசு சார்பில் கஜா புயல் நிவாரண நிதியாக புதுச்சேரிக்கு 13.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புயல் மற்றும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி, ஆந்திரா, உத்தரபிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களுக்கு 7,214 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் பியூஷ்
கோயல், வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், மேலும் சில மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள்,

கஜா புயல் நிவாரண நிதியாக புதுச்சேரிக்கு 13.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புயல் மற்றும் வறட்சியால் பாதித்த புதுச்சேரி, ஆந்திரா, உத்தரபிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களுக்கு 7,214 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றில் அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநிலத்துக்கு 4,700 கோடி ரூபாய் வழங்கப்பட்டள்ளது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்துக்கு 949.49 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், ஆந்திராவுக்கு 900.4 கோடி ரூபாய், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 191.73 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க