• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனே பேக்கரி தீ விபத்து 6 தொழிலாளர்கள் பலி

December 31, 2016 தண்டோரா குழு

மகாராஷ்டிர மாநிலம் புனே நகர் பேக்கரி ஒன்றில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) அதிகாலை திடீரென்று தீ பிடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
புனே நகரில் பலமாடி கட்டடத்தின் கீழ்பகுதியில் ‘பெகேஸ் அண்ட் கேகேஸ்’ என்னும் பிரபல பேக்கரி உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் அங்கே திடீரென்று தீ பிடித்துள்ளது.

பேக்கரி உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பேக்கரிக்கு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் தப்பிக்க முடியவில்லை. தீயின் புகையால் மூச்சுத்திணறி பரிதாமாக உயிரிழந்தனர். குறைந்த மின்சாரக் கோளாறு காரணமாகத்தால் இந்த விபத்து நேர்ந்தது என்று சந்தேகிக்கிறோம். மேலும் 6 பேர் உள்ளிருக்கும் போது எப்படி வெளியே பூடப்பட்டிருந்தது என்று விசாரணை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க