• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனேவில் நடைபெறுமா ஐபிஎல் போட்டிகள் தொடரும் சிக்கல்!

April 18, 2018 தண்டோரா குழு

புனேவில் நடைபெறும் சென்னை அணியின் போட்டிகளுக்கு பாவனா அணையில் நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் தடைவித்துள்ளது.

சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல்.போட்டிகள் மாகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில் கோடை காலம் என்பதால் மாநிலம் முழுவதும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மைதானத்தை பராமரிக்க எங்கிருந்து தண்ணீா் கொண்டுவரப்படும் என்று மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.இதற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஐ.பி.எல். போட்டிகளின் போது மைதான பராமரிப்பிற்கு பாவனா அணையில் இருந்து நீரை கொண்டு வந்து பராமரிக்கப்படவுள்ளது.இதற்கு மாநில அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.எனவே திட்டமிட்டபடி புனேவில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், புனேவில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பாவனா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை மைதான பராமரிப்புக்கு அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் புனேவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க