April 18, 2018
தண்டோரா குழு
ஐ.பி.எல்.போட்டிகள் திட்டமிட்டபடி புனே மைதானத்தில் நடைபெறும் என மகாராஷ்டிர கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில் கோடை காலம் என்பதால் மாநிலம் முழுவதும் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மைதானத்தை பராமரிக்க எங்கிருந்து தண்ணீா் கொண்டுவரப்படும் என்று மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஐ.பி.எல். போட்டிகளின் போது மைதான பராமரிப்பிற்கு பாவனா அணையில் இருந்து நீரை கொண்டு வந்து பராமரிக்கப்படவுள்ளது.இதற்கு மாநில அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.எனவே திட்டமிட்டபடி புனேவில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.