• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனேவிற்கு மாற்றபட்ட ஐபிஎல் போட்டி நடக்குமா புதிய சிக்கல்

April 13, 2018 தண்டோரா குழு

சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2018ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 7ம் தேதி மும்பையில் துவங்கியது.தமிழகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.இதனால்,சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும்,ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.போட்டி துவங்க சுமார் 4 மணி நேரம் இருந்த நிலையில்,அண்ணாசாலையில் அரசியல் கட்சியினர்,தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு தர போலீசார் மறுத்ததால்,வேறு இடத்திற்கு மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.இதையடுத்து சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றபட்டது.

இந்நிலையில், மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள புனேவில் கிரிக்கெட் மைதானத்திற்கு எப்படி தண்ணீர் வழக்க முடியும் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதனால் புனேவில் ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க