• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 20 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சிறுவன் உலக சாதனை

December 29, 2022 தண்டோரா குழு

ஜனவரி 1ம் தேதி உலகம் எங்கும் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. பிறக்க உள்ள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழக மாணவனும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் சரண்யா தேவி தம்பதியரின் மகன் பாலமுரளி கிருஷ்ணா (11) 2023 வருட பிறப்பை முன்னிட்டு போர் சிலம்பம் முறையில் தொடர்ந்து 20 மணி நேரம் 23 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்துள்ளார்.

இதுகுறித்து பால முரளி கிருஷ்ணா கூறியதாவது:

2023ம் வருட பிறப்பை முன்னிட்டு தொடர்ந்து 20 மணி நேரம் 23 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனையை இந்தியா உலக சாதனை புத்தகம் அமெரிக்கா உலக சாதனை புத்தகம் மற்றும் ஐரோப்பா உலக சாதனை புத்தகம் ஆகிய மூன்று உலகச் சாதனை புத்தகங்கள் அங்கீகரித்துள்ளது.

நான் இந்த சாதனையை புரிய எனது பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் எனக்கு தீவிர பயிற்சி அளித்தார்.பயிற்சிக்காக எனது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டேன். அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்வேன். இயற்கையான மற்றும் சத்தான உணவுகளை மட்டுமே உட்கொள்வேன். 2023 ஆண்டு கொரோனா தொற்று அல்லது வேறு எந்த பிரச்சனைகளாலும் மக்கள் பாதிக்க ப்படக்கூடாது.உலக மக்கள் அனைவரின் வாழ்க்கையும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக அமைய வேண்டும்.

வாழ்க்கையில் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் துன்பங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதை நாம் துணிவோடும் தைரியத்தோடும் எதிர் கொள்ள வேண்டும். அதற்கு நம் மனதையும் உடலையும் ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, மக்கள் அனைவரும் வரும் 2023 ஆம் ஆண்டு முதல் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சியய் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மேலும், இயற்கையான சத்தான உணவுகளை உண்ண வேண்டும். இதுபோன்ற மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் எத்தனை முறை கொரோனா உருமாறி வந்தாலும் அதை நாம் எதிர்கொள்ளலாம். என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என கூறினார்.

மேலும் படிக்க