• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புத்தாண்டு கொண்டாடத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது வழக்கு!

January 1, 2019 தண்டோரா குழு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டை வரவேற்கும் வகையில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னையிலும் நேற்று மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், நேற்று காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதுடன் குற்றம் செய்தவரின் தகவல்கள் குற்ற ஆவணக்காப்பகத்தில் பதிவு செய்யப்படும். பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கடுமையான விதிகளை விதித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், மேலும் இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி 3 பேர் பயணித்ததாக 233 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க