December 31, 2020
தண்டோரா குழு
வேளாண் சட்டத்திற்கு எதிராக புத்தாண்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் முதல்வர் தலையில் பச்சை நிற தலைப்பாகை மற்றும் கைகளில் நெற்கதிர் உடன் இருக்கும் பேனர் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் மேலும் உடனடியாக வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி புத்தாண்டு பிறக்கும்போது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் குழந்தைகளுடன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசிற்கு எதிராக வும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி யும் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்தில் அதிமுக கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையில் பச்சை நிற தலைப்பாகை அணிந்தபடி கைகளில் நெற்கதிர் உடன் சிரித்தபடி இருக்கும் புகைப்படம் இடம் பெற்று இருந்தது, எனவே அந்த பேனருக்கு முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.