March 2, 2018
தண்டோரா குழு
புத்தகங்களை தாண்டி இளைஞர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி கூறியுள்ளார்.
கோவை கிருஷ்ணா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.பி. வருண் காந்தி,
ஐ.ஐ.டி. ஆய்வின்படி இந்தியாவில் உள்ள முன்னணி 500 கல்லூரியில் இருந்து 4.8% மாணவர்கள் மட்டுமே ஓரளவு கணினி தொழில்நுட்ப பணியில் சேர்வதற்கான தகுதி பெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தற்போதைய போட்டியான காலகட்டத்தில் புத்தகங்களை தாண்டி இளைஞர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வடத்தில் 75 ஆயிரம் ஐடி ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாகவும், 1.3 லட்சம் கோடி கல்விக்காக செலவிடப்படும் நிலையில், 80 சதவிகிதம் கட்டிடங்களுக்காக மட்டுமே பயன்படுவதாக கூறியவர், கல்லூரி நிறுவனங்கள் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும்,52% மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 11% பாராளுமன்றத்திலும், 9% சட்டமன்றத்திலும் பெண்களின் பங்கு என்பது வேதனைக்குரியது. பொறுப்பில் உள்ள பெண்களும் ஆண்களின் பின்புலத்தில் அல்லது அரசியல் குடும்ப பின்னனியில் இருந்து வருவதாகவும், இந்த நிலைமாறி அரசியல் பின்புலமின்றி, சுயமாக செயல்படும் வகையில் அரசியல், பொது வாழ்வில் பெண்கள் ஈடுபட முன்வர வேண்டும் என்றார்.
பாலியல் பலாத்காரம் ஆசிட் வீச்சு,உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்தியாவில் சாதி, மதம் பார்த்தே அரசியல் வாதிகளுக்கு வாக்களிப்படுவதாகவும், வெளிநாடுகளில் வெளிப்படையான விவாதம் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் உண்மையான ஜனநாயக முறையை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
மேலும்,தனது தொகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மீதமாகும் உணவுகளை,மறுசுழற்சி செய்தி ஆதரவற்ற மக்களுக்கு வழங்கும் திட்டத்தை தமிழகத்திழும் கொண்டு வர வேண்டும் என்றும் மாணவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை twitter, Facebook மூலமாக தமக்கு தெரிவிக்கும்படியும், முடிந்தவரை அதற்கு தீர்வுக்கான முடிந்ததை செய்வேன் என்றார்.