October 3, 2018
தண்டோரா குழு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை கோரி, அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில், சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன், அரசையும், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினார். அப்போது, அவர் பேசும்போது மைக்கை ஆப் செய்ததால் கிரண்பேடிக்கு, அன்பழகனுக்கும் இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம், அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசானா ஆகியோர் மனு அளித்துள்ளனர்.அதில், பொது மேடையில் சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட துணைநிலை ஆளுநர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த புகார் மனுவை பெற்று கொண்ட சபாநாயகர், இம்மனு உரிமை மீறல் குழுவுக்கு அனுப்படும் என தெரிவித்துள்ளார்.