• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதுச்சேரி சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து தீர்மானம்

January 20, 2017 தண்டோரா குழு

“ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப் பேரவையில் ஜனவரி 24-ம் தேதி தீர்மானம் கொண்டு வரப்படும்” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

“தமிழகம், புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு அனைத்துக் கட்சியினரும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமாகியுள்ளது.

எனவே, ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, அவசரச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு விஷயம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும்போதும், அது தொடர்பாக மத்திய அரசால் அவசரச் சட்டம் கொண்டுவர முடியும். உதாரணமாக, கடந்த காலங்களில் ஆதி திராவிடர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளோம்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும் 24-ம் தேதி கூட்டப்பட உள்ள புதுச்சேரி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம். தமிழக அரசும் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றினால் மத்திய அரசு அனுமதி தர முடியும்”.

இவ்வாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

மேலும் படிக்க