March 31, 2018
தண்டோரா குழு
புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.,11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.,11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என 20க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மேலும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.3ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.