• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய மணம், சுவையுடன் 9 வகை அன்னபூர்ணா மசாலா அறிமுகம்

November 3, 2020 தண்டோரா குழு

கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அன்னபூர்ணா மசாலா, மசாலா தயாரிப்பு கலையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது 9 வகையான மசாலாக்களை அறிமுகப்படுத்தி, விரிவாக்க நடவடிக்கையில் களம் இறங்கியுள்ளது.

தமிழ்நாடு மண்டல அளவிலான சுவையான சமையல் மற்றும் பிரியாணி வகைகளுக்கென செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரோஸ்ட் மசாலா, மதுரை மட்டன் சுக்கா மசாலா, திண்டுக்கல் மட்டன் குழம்பு மசாலா, தூத்துக்குடி பரோட்டா சால்னா மசாலா, கொங்குநாடு நாட்டுகோழி குழம்பு மசாலா, நெல்லை புளி குழம்பு மசாலா, செட்டிநாடு மிளகு குழம்பு மசாலா, ஆம்பூர் பிரியாணி மசாலா மற்றும் திண்டுக்கல் பிரியாணி மசாலா ஆகியவை புதியதாக அறிமுகம் செய்யப்படுகின்றன.

அன்னபூர்ணா மசாலா, ஏழு வித்தியாசமான வகைகளில் கிடைக்கிறது. தமிழகத்தில் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் கிடைக்கும் நறுமணமிக்க, சுத்தமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மசாலா, சமையலில் மணமும், சுவையையும் கூட்டுகிறது.

இது குறித்து அன்னபூர்ணா மசாலாஸ் அன்ட் ஸ்பைசஸ் செயல் இயக்குனர் விஜய் பிரசாத் கூறியதாவது :-

கடந்த 1975 முதல் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா, வாடிக்கையாளர்களின் சுவையை புரிந்து கொண்டு, முன்னுரிமை அளித்து தேவைக்கு ஏற்பவும், எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இதன் பெயருக்கு ஏற்ப, தமிழ்நாட்டிற்கு பெருமை தரும் சில புகழ்மிக்க உணவு வகைகளை எளிதாக சமைக்க இந்த மசாலா உதவும் வகையில் தயாரித்துள்ளோம். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு பிறகு, தற்போது அந்தந்த பகுதிகளில் உள்ள சுவையான உணவுக்கு வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள், உள்ளூர் சுவையை பெற இது மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ‘அன்னபூர்ணா 2.0’ விஜய்யின் பெரும் முயற்சியால் புதிய அவதாரத்தை பெற்றுள்ளது. தற்போது 53 வகைகளை கொண்டுள்ள அன்னபூர்ணா, அடுத்த மூன்று ஆண்டுகளில் 80 ஆக உயர்த்தும். இருப்பு வைக்க ஏற்கனவே, 101 யூனிட்டுகளை கொண்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்காக, அன்னபூர்ணா பல்வேறு வித்தியசமான அணுகுமுறைகளை கையாளும். சுத்தமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மசாலாக்கள், இந்தியாவின் சுவைமிகுந்த பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கொண்டதாக இருக்கும். அந்தந்த பகுதிகளில் உள்ள தனித்துவமிக்க சுவையை மீண்டும் புதுப்பிக்கும் வகையிலான மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். விரிவாக்க நடவடிக்கை மற்றும் விற்பனையை உயர்த்த விஜய், கூடுதல் முதலீட்டினை மேற்கொண்டுள்ளார்.

இந்திய உணவு பாரம்பரியத்தில், உணவு பொருட்களை ஆழ்ந்து அறிந்து ஒவ்வொன்றையும் தயாரிப்பது, அன்னபூர்ணாவின் வெற்றிக்கு காரணியாக அமைந்தது. 40 ஆண்டுகளாக தொடர்ந்து இதை கடைபிடிப்பதால், சந்தையில் தொடர்ந்து நிலை பெற்றுள்ளதோடு, புதிய அறிமுகத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்த மசாலாக்கள் உற்பத்திக்கென கோவையில் ஒவ்வொரு நாளும் 35 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 35000 சதுரடியில் தொழிற்சாலை உள்ளது. வளர்ச்சிக்கென ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு ஒன்றும் அனைத்து வசதிகளுடனும் உள்ளது.

மேலும் படிக்க