• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த கோரி ஆர்ப்பாட்டம்

March 14, 2022 தண்டோரா குழு

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த கோரி SRMU ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய பென்சன் திட்டத்தில் 2004 ற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் இல்லை என்று அறிவிக்கபட்டுள்ளதால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த கோரி இன்று SRMU/AIRF சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை குட்செட் சாலையில் உள்ள கோவை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யு/ எ.ஐ.ஆர்.எஃப் ஊழியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே நடைமுறை படுத்த கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் பி.எப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க