June 29, 2018
தண்டோரா குழு
புதிய பாடத்திட்டத்தில் கி.மு.,கி.பி., என்ற முறையே தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வரலாற்று பாட நூல்களில் இதுவரை கி.மு.,கி.பி. என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில்,இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தில் வரலாற்று நூல்களில் பொது ஆண்டுக்கு முன்,பொது ஆண்டு என்று மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாடபுத்தங்களில் கி.மு,கி.பி மாற்றத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் புதிய பாடப்புத்தகங்களில் கி.மு,கி.பி என்ற முறையே பின்பற்றப்படும்” என தெரிவித்தார்.