May 4, 2018
தண்டோரா குழு
சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1,6,9,11 ஆம் வகுப்பு புத்தகங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
நீட் தோ்வு தொடா்பாக நடைபெற்ற வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது.
மேலும் 12 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படாதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.இதனைத் தொடா்ந்து தமிழக பாடத்திட்டங்கள் விரைவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த புதிய பாடத்திட்ட புத்தகங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.மேலும்,புதிய பாடத்திட்ட புத்தகங்கள் குறித்து ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் என்று தெரிவித்தார்.