• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய உயிரினத்துக்கு அப்துல்கலாம் பெயர்

May 23, 2017 தண்டோரா குழு

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பாக்டீரியாவிலிருந்து உருவாகியுள்ள புதிய உயிரினத்துக்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை வைத்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பில்ட்டர்களில் புதிய பாக்டீரியாவிலிருந்து உருவாகியுள்ள புதிய உயிரினத்தை கண்டுப்பிடித்து, அதற்கு “Solibacillus Kalamii” “சொலிபாசில்லஸ் கலாமி” என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

கடந்த 40 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த “High Efficiency Particulate Arrestance Filter” என்று அழைக்கப்படும் பில்டரில் இந்த புதிய பாக்டீரியாவை
நாசாவின் ஜெட் புரோலிபியன் லேபரட்டரி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

JPLலில் சோதனை செய்த பிறகு, “International Journal of Systematic and Evolutionary Microbiology” என்னும் பத்திரிக்கையில் டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் இதை வெளியிட்டார்.

JPLயின் பயோடெக்னாலஜி மற்றும் பிலானாட்டரி பாதுகாப்பு குழுவின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி, டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கூறுகையில்,

“புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட பாக்டீரியாவின் பெயர் “Solibacillus Kalamii”. அதன் இனத்தின் பெயர்(Genus name) அதனுடைய பொதுவான பெயர்(Specius name) “Solibacillus” என்பதாகும்.

பூமிக்கு மேல் சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திலிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல வகையான பாக்டீரியா மற்றும் புஞ்சை ஆகிய உயிரினங்களுக்கு வீடாகும். அங்கு வசிக்கும் விண்வெளி வீரர்கள் இந்த பாக்டீரியாவுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த உயிரினத்துக்கு இந்தியாவின் மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்களின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் அளித்துள்ள பங்களிப்புகளை கவுரவிப்பதற்காக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.மேலும் அப்துல் கலாம், 1963 ஆம் ஆண்டு நாசாவில் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க