May 30, 2018
தண்டோரா குழு
இந்தியா முழுவதும் பதஞ்சலி தயாரிப்புகள் இருந்த நிலையில் புதிதாக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம்கார்ட் ஒன்றை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் புதிதாக சுதேசி சம்ரதி என்கின்ற பெயரில் ஒரு சிம்கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம்கார்டு வாங்கி 144 ரூபாய் ரீசார்ஜ் செய்து கொண்டால் அளவில்லா அழைப்புகளும் 2ஜிபி இண்டெர்நெட் மற்றும் 100 எஸ்எம்எஸ் உள்ள வசதிகள் கிடைக்கும்.
மேலும் இந்த சிம்கார்ட் வாங்கினால் 2.5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வசதியும் உண்டு.மேலும் இந்த சிம்கார்ட் வாங்குபவர்களுக்கு பதஞ்சலி தயாரிப்பு பொருட்களில் 10% சலுகை வசதியும் உண்டு என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த சிம்கார்ட் பதஞ்சலி ஊழியர்களுக்கு மட்டும் வழங்கபட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் பொதுமக்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.