• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானக் கடையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு

July 25, 2022 தண்டோரா குழு

மதுக்கரை மார்க்கெட் சந்தையில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி சார்பில் கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை மார்க்கெட் சந்தை பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட உள்ளது. எனவே இந்த மதுபான கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை மார்க்கெட் சந்தை பகுதியில் மதுபான கடை புதிதாக திறக்கப்பட உள்ளது. இங்கு ஏற்கனவே இரண்டு மதுபான கடைகள் உள்ளன. தற்போது திறக்கப்பட உள்ள இந்த மதுபான கடை சுற்றி பள்ளி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. தற்போது திறக்கப்படவுள்ள இந்த மதுபான கடையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். எனவே இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் நாம் தமிழர் கட்சி கிணத்துகடவு சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜீவானந்தம், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கிரண், தொழிலாளர் பாசறை பூலோகம் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க