• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதர் மண்டி காடு போல் காட்சியளிக்கும் கோவை போத்தனூர் காவலர் குடியிருப்பு

January 23, 2020

கோவை போத்தனூர் காவலர் குடியிருப்பில் புதர் மண்டி காடு போல் காட்சியளிப்பதால் , சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் சங்கம் வீதி அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 130 குடியிருப்புகளில் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இந்த குடியிருப்பில் மாநகராட்சி ஊழியர்கள் முறையாக தூய்மைபடுத்தாமல் அலட்சியம் காட்டுவதால் குடியிருப்பில் புதர் மண்டி காணப்படுகிறதும் இதனால் இரவு நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் குடியிருப்பு கட்டிடங்களை எலிகள் நுழையிட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். குடியிருப்பு வளாகத்தின் வெளியே ஏராளமானோர் தங்கள் கார் நிறுத்தும் பார்க்கிங்குகளாக மாற்றி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக குடியிருப்பை பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க