• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புகைப்படங்கள் நினைவுகளை பதிவு செய்துகொள்ள உதவும் ஒரு கருவி !

August 19, 2023 தண்டோரா குழு

புகைப்படங்கள் நம் சந்தோஷங்களை, நினைவுகளை பதிவு செய்துகொள்ள உதவும் ஒரு கருவி. நிகழ் காலத்தில் இருந்துகொண்டு நம் கடந்த கால நினைவுகளை இளைப்பாறலாம். கடந்த கால இன்பமான நினைவுக்கு மீண்டும், நாம்மை சில நொடிகள் கொண்டு சேர்க்க காரணமாகின்றன புகைப்படங்கள்.

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.லூயிஸ் டகுரே என்பவர் வளர்த்த புகைப்பட கலை கண்டுபிடித்ததை நினைவுகூறும் வகையில் உலக புகைப்பட தினம் 1837ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. புகைப்பட வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் புகைப்பட கலை மற்றும் அறிவியலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்கள், விரும்பிகள் வித்யாசமான புகைப்படங்கள் எடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றனர். அதை பகிர்ந்துகொள்கின்றனர். சமூக வலைதளங்களில் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தும், புகைப்படம் தொடர்பான நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தியும் மகிழ்கின்றனர். காலநிலை மாற்றம் வானிலை மாற்றம் என்று எந்த நிலையும் அறியாமல் ஒவ்வொரு நொடிகளில் ஒளிந்திருக்கும் அற்புதங்களை திரையில் காட்டகூடியவர்கள் புகைப்பட கலைஞர்கள் அந்த வகையில் இயற்கை மற்றும் வன விலங்குகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே இல்லாமல் வன உயிரினங்கள் மற்றும் பறவைகளின் முக்கியதுவம் பல்லுயிர் சூழலின் பங்கு குறித்தும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகிறார் கோவையை சேர்ந்த சிராஜ்தீன் .

ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும், ஒரு ஸ்டைல் இருக்கும். அந்தவகையில் சிராஜ்தீன் வன உயிரினங்கள் தேடி படம்பிடிப்பதையே தன்னுடைய ஸ்டைலாக கொண்டிருந்தார் அதற்காக கர்நாடகம் , கேரளா, மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு நீர் நிலைகள் வனப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்றுவந்தவர்.

கோவையில் நல்ல சுற்றுச்சூழல் இயற்கை எழில்மிக்க இடங்கள் இருந்தன , அங்குள்ள நீர்நிலைகள் நோக்கி மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா (Pelican) போன்ற நிறைய பறவைகள் வரும். அந்த பறவைகளை படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது.

விடுமுறை நாட்களில் கையில் கேமராவை தூக்கிக்கொண்டு வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்கு காடுகளை நோக்கி பயணித்திருக்கிறார். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அதில் கிடைத்த படங்களை இங்கே பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க