• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா!!

March 3, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகா ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகி சுசித்ரா வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழில் முன்னணி பின்னணி பாடகியும் நடிகர் கார்த்திக்கின் மனைவியுமான சுசித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக புகைப்படத்துடன் டுவிட்டரில் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன்பின் தனது டுவிட்டர் பக்கதை யாரோ ஹாக் செய்து விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் வெள்ளியன்று சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில்

நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, ஹன்சிகா ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை ஆன்டிரியா. தனுஷ், ஹன்சிகா, டிடி ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா, “உங்களது ஹீரோ, ஹீரோக்களின் மேலும் சில லீலைகள் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

எனினும்,சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதைச் சரிகட்டும் விதமாக சுசித்ராவின் செல்பி புகைப்படமும் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனால் பயங்கர குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் சுசித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதனால் எங்கள் குடும்பமே மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இன்று அவருடைய ட்விட்டர் கணக்கை மீட்டுவிட்டோம். கடந்த சில நாள்களாக வெளிவந்த ட்வீட்களை சுசித்ரா வெளியிடவில்லை. அவை அனைத்தும் போலியானவை.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களுக்கு இது எந்தளவுக்கு மன அழுத்ததை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன்.ஊடகங்கள் இதைப் பரபரப்பாக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பரபரப்பை உண்டாகிய அப்புகைப்படங்கள் அவரது கணக்கில் இருந்து அகற்றப்பட்டன.

மேலும் படிக்க