June 16, 2021
தண்டோரா குழு
கோவை பீளமேடு காந்தி நகரைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் வயது 21 கல்லூரி படிப்பை முடித்தவர்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி வயது 21 இவர்கள் இருவரும் காதலர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து நேரு நகர் வீரியம்பாளையம் ரோட்டில் போலீசார் ரோந்து செல்லும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தனர்.
அவர்களது பையில் சோதனை செய்தபோது சுமார் இரண்டே கால் கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.அவர்களை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உட்பட போலீசார் சோதனை செய்ததில் கஞ்சா பிடிபட்டது.
இந்த நிலையில் அவர்களை பிடித்து பீளமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட வினோதினி டிப்ளமோ நர்சிங் படித்தவர்,சூரிய பிரகாஷ் பட்டப்படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.இவர்கள் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த சூழலில் அவர்கள் கோவை காந்திமா நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர்.திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டு இருந்த நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,வேறு கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பீளமேடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.